ஐபிஎல் 2023.. ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்.. கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ஒவ்வொரு அணியும் தங்களுடைய கேப்டன் மற்றும் அணியின் சீருடையை அறிமுகம் செய்து வருகின்றனர்.

 இதில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் போட்டியில் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் இன்னும் சரியாகவில்லை என்பதால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து கொல்கத்தா அணியின் புதிய கேப்டனை நியமிக்க கொல்கத்தா அணி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. அதன்படி, சுனில் நரைன் அல்லது ஷர்துல் தாக்கூர் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட  வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நிதிஷ் ரானா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கொல்கத்தா அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 nithish rana appointed KKR new captain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->