#IPL2023 : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த சென்னை - பெங்களூர் போட்டி.!
IPL 2023 RCB vs CSK match 2.4 crores views in Jio cinema
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பௌலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் சிறப்பாக விளையாடிய கான்வே 45 பந்துகளில் (6 சிக்ஸர் & 6 பவுண்டரி) 83 ரன்களும், ஷிவம் தூபே 27 பந்துகளில் (5 சிக்ஸர் & 2 பவுண்டரி) 52 ரன்கள் குவித்தனர்.
அதனைத் தொடர்ந்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெறும் என நினைத்த நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் டூபிளஸிஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனையடுத்து சென்னை அணிக்கு வெற்றி வாய்ப்பு திரும்பியது. கடைசி ஓவர் வரை போராடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த நிலையில் இந்த போட்டியை ஜியோ சினிமா செயலியின் மூலமாக 2.4 கோடி பேர் பார்த்துள்ளனர். அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக பார்வையாளர்களை ஈர்த்த போட்டியாகும். இதற்கு முன்பு சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியை 2.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.
English Summary
IPL 2023 RCB vs CSK match 2.4 crores views in Jio cinema