ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி இலவசமாக பார்க்கலாம்.. எந்த செயலியில் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது.

இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 'ஏ' ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய பிரிவில் உள்ள அணிகளுடன் 2 முறையும், மற்றொரு பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும் மோதுகின்றன.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. பிளேஆப் மற்றும் இறுதிப்போட்டி குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்த சீசனில் வழக்கம் போல லீக் சுற்று 7 போட்டிகள் சொந்த மற்றும் 7 போட்டிகள் எதிரணி மைதானங்களில நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐபிஎல் போட்டிகளை 11 மொழிகளில் ஜியோ சினிமா செயலியின் மூலமாக இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 telecast on Jio cinema app


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->