ஐபிஎல் 2025: ஹாட்ரிக் தோல்வியால் 8வது இடத்தில் சறுக்கிய சிஎஸ்கே!
IPL 2025 csk vs DC
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில், தில்லி கேபிடல்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ், 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் நொலுக்கு ஆட்டமிழந்தாலும், கே.எல்.ராகுல் (77 ரன்கள், 51 பந்துகளில்) அபிஷேக் போரெல் (33 ரன்கள், 20 பந்துகளில்) இணைந்து அணியை நிலைநிறுத்தினர். இறுதியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி தாக்குதலாக 24 ரன்கள் எடுத்து அணியின் ரன்கள் எண்ணிக்கையை உயர்த்தினார்.
சிஎஸ்கே பந்துவீச்சில் கலீல் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார். ஜடேஜா, நூர் அகமது, பதிரானா தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. விஜய் சங்கர் (69 ரன்கள்), தோனி (30 ரன்கள்), ஷிவம் துபே (18 ரன்கள்) சிறப்பாக விளையாடினாலும், வெற்றியைத் தட்டிக்கொளல் முடியவில்லை.
தில்லி அணியில் விப்ராஜ் நிகம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க், முகேஷ், குல்தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்த தோல்வியுடன் சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோற்றதோடு, புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளது.