ஐபிஎல் 2025: தோனி ஓய்வு பெற்றால், மொத்த தொடருக்கும் இழப்பு – கிறிஸ் கெய்ல் பதிலடி! - Seithipunal
Seithipunal


2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முதல் போட்டியில் வெற்றியை பெற்றிருந்தாலும், அதன்பிறகு நடந்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்காதது என்று பலரும் கருதுகின்றனர்.

ஆனால், சமூக ஊடகங்களில் சிலர், தோனி மேலே பேட்டிங் செய்ய வராததே CSK தோல்விக்குக் காரணம் என விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு பதிலளித்த CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், தோனியின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவர் மேலே பேட்டிங் செய்ய முடியாது என்று விளக்கம் அளித்தார். அதேசமயம், தோனி அணிக்காக இன்னும் மதிப்புமிக்க வீரராக இருப்பதாகவும், அவர் கேப்டனுக்கு ஆதரவு அளிப்பது, விக்கெட் கீப்பிங் செய்யும் திறன் ஆகியவை CSK-க்கு பயனளிப்பதாகவும் கூறினார்.

ஆனால், இதையெல்லாம் ஏற்காத விமர்சகர்கள், "இந்த வயதில் தோனிக்கு இதெல்லாம் தேவையா? ஓய்வு பெறலாம்!" என விமர்சிக்க, அவர்களுக்கு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பதிலடி கொடுத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் கருத்து

தோனியின் மீது பரவிய விமர்சனங்களை கண்டித்த கெய்ல், "தோனி ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய மதிப்பைக் கொண்டு வருகிறார். அவர் விளையாடும் வரை அனைவரும் அவரை காண விரும்புவார்கள். அவரை தள்ளிவிட முயற்சிக்க கூடாது" என தெரிவித்தார்.

மேலும், அவர் தொடர்ந்துப் பேசும் போது:மக்கள், தோனி போன்ற கிரேட் பிளேயர் மற்றும் சிறந்த மனிதருக்கு தவறான மெசேஜ்களை அனுப்புகின்றனர். நீங்கள் தோனி போன்ற ஒருவருக்கு இது போன்ற செய்திகளை அனுப்பக்கூடாது. ஏனெனில், அவர் ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய ஆளுமை.

தோனி எந்த இடத்திலும் விளையாடினாலும் ரசிகர்கள் அவரை காண விரும்புவார்கள். என்னைக் கேட்டால், அவர் 11வது இடத்திலும் பேட்டிங் செய்தாலும் கூட மக்கள் அவரை பார்ப்பதற்கு மைதானம் நிறைய வருவார்கள்.CSK மற்றும் ஐபிஎல் தொடரில் தோனி ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். அவர் ஓய்வு பெற்றால், அது மொத்த ஐபிஎல் தொடரின் மகத்துவத்தையே பாதிக்கக்கூடும்.

தோனி சென்னை அணிக்காக செய்துள்ளவை அனைத்தும் அற்புதமானவை. இந்தியாவில் CSK ஆடியால் 'விசில் போடு' சத்தம் மட்டுமே இருக்கும். அது தான் தோனி கொண்டுவரும் பவராகும்.

தோனியின் ஓய்வு குறித்து விமர்சனங்கள் எழும்பியுள்ள நிலையில், கெய்லின் ஆதரவு கருத்துக்கள், CSK ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2025 If Dhoni retires the entire series will be a loss Chris Gayle respond


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->