ஐபிஎல் இறுதிப்போட்டி.. சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்.? சென்னை பௌலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அனைத்து போட்டிகளும் முடிவடைய உள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் நேற்று இரவு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவிருந்த இறுதிப்போட்டி கன மழையின் காரணமாக இன்று நடைபெற உள்ளது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை -குஜராத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

அணி விவரம்

குஜராத் டைட்டன்ஸ் அணி 11 வீரர்கள் :

விருத்திமான் சாஹா(வி.கீ), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கே), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி

சென்னை சூப்பர் கிங்ஸ் 11 வீரர்கள் :

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(w/c), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Final CSK won the toss choose to Bowl against GT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->