#IPLAuction : 11.50 கோடிக்கு இங்கிலாந்து வீரரை எடுத்த முக்கிய அணி.. ஏலத்தில் எடுக்காத அதிரடி வீரர்கள்.!
Ipl Mega Auction Liam Livingston sold to Punjab kings
15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது.
10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை ₹11.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.
அதனைத்தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த வீரர் டொமினிக் ட்ரேக்ஸை ₹1.10 கோடிக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை ₹2.60 கோடிக்கு வாங்கியது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அஜிங்கியா ரஹானேவை ₹1 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.
அதேபோல் ஆஸ்திரேலிய வீரர்களான ஆரோன் பின்ச், மார்னஸ் லபுசஞ்ச், இங்கிலாந்து வீரர் ஒய்ன் மோர்கன், இந்திய வீரர்களான புஜாரா, சவுரப் திவாரி ஆகிய வீரர்களை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.
English Summary
Ipl Mega Auction Liam Livingston sold to Punjab kings