அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஹார்டிக் பாண்டியா கேப்டன்.! - Seithipunal
Seithipunal


அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஜூன் 26 மற்றும் ஜூன் 28-ல் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறாத வீரர்கள் டி20 தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, தென் ஆப்பிரிக்க தொடரில் காயம் காரணமாக விளையாடாத கேஎல் ராகுல் மற்றும் கேப்டனாக வழிநடத்தும் ரிஷப் பந்த் பெயர்கள் அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அதன்காகாரணமாக புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:

ஹார்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், அக்ஷர் படேல், ரவி பிஷ்னாய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ireland T20 series Indian team announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->