டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜடேஜா.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 17-21) காலை 9:30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தற்போது தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீத்தியுள்ளனர்.

இதில், ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படித்துள்ளார். மேலும், அதிவேகமாக இந்த சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 2500 ரன்கள் மற்றும் 250 விக்கெட் வீழ்த்திய வீரர்கள்;

இயன் போத்தம் (இங்கிலாந்து) - 55 போட்டிகள்

ரவீந்திர ஜடேஜா * (இங்கிலாந்து) - 62 போட்டிகள்

இம்ரான் கான் (பாகிஸ்தான்) - 64 போட்டிகள்

கபில் தேவ் (இந்தியா) - 65 போட்டிகள்
N
ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து) - 70 போட்டிகள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jadeja get 250 wickets and 2500 runs in test fastest Indian


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->