ஜெய்ஷா விளையாட்டில் அரசியலைக் கொண்டு வரக்கூடாது! முன்னாள் பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார். மேலும் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்தில் மாற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என அறிவித்துள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் ஏற்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டியை அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியல் கொண்டு வரக்கூடாது. ஆசிக் கோப்பை திட்டமிட்டதபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான அணி பங்கேற்க கூடாது. அதேபோன்று எந்த வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக்கூடாது" என கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டி திட்டமிட படி நடைபெறும். ஆனால் பிசிசிஐயின் இந்த நடவடிக்கையால் எதிர்வரும் காலங்களில் ஐசிசி நடத்தும் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jay sha should not bring politics into the game Former Pakistan Player Advice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->