மீண்டும் பார்முக்கு திரும்பிய ரோகித்; ஒரு நாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்..!
Joe Root has created a historical record in ODI cricket
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 03 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 02-வது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியின் சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 03 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட, ரோகித் அதிரடியாக விளையாடி வருகிறார். தொடர்ந்து சொதப்பி பெரும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் நீண்ட நாட்கள் கழித்து பார்முக்கு திரும்பி தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று ஆட்டத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி வெறும் 30 பந்துகளில் அரைசதம் ரோகித் சர்மா அடித்து மீண்டும் தன்னை நிரூபித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது வரை இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 02 விக்கெட்டினை இழந்து 151 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 81 ரன்கள் எடுத்துள்ளார். கில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். விராட் கோலி 05 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரைசதமாக பதிவானது. இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இயன் மோர்கன் 55 அரைசதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-
1. ஜோ ரூட் - 56
2. இயன் மோர்கன் - 55
3.ஐயன் பெல் - 39
4. பட்லர் - 38
5. கெவின் பீட்டர்சன் - 34
மீண்டும் பார்முக்கு திரும்பிய ரோகித்; ஒரு நாள் கிரிக்கெட்டில்வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்..!
English Summary
Joe Root has created a historical record in ODI cricket