டி20 உலகக் கோப்பையை வெல்லுமா இந்திய அணி?  இன்று ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி.! - Seithipunal
Seithipunal


ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பை தொடரானது தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலக்கோப்பை முதல் மகளிர் அண்டர்-19 டி20 உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 3 ரன்கள் த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று மாலை 5.15 மணிக்கு நடைபெற உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Junior T20 World Cup Final IND vs ENG


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->