#TATA_IPL2023 || ஆர்.சி.பி அணியில் கேதர் ஜாதவ்.. டேவிட் வில்லிக்கு பதிலாக சேர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இன்று இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லிக்கு பதிலாக கேதர் ஜாதவ் டாடா ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டரான வில்லி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கேதர் ஜாதவ் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1196 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ஆர்.சி.பி அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர் ரூ.1 கோடிக்கு ஆர்.சி.பி அணியால் தற்பொழுது வாங்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய ஜாதவ் ஐபிஎல்லில் 2வது முறையாக விளையாடுகிறார். அவர் 87 ஐபிஎல் போட்டிகளில் 22.52 சராசரி மற்றும் 126.13 ஸ்டிரைக் ரேட்டில் 1,594 ரன்களை எடுத்துள்ளார்.அவர் போட்டியில் 8.28 என்ற எகானமி ரேட்டுடன் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆர்.சி.பி அணி மிடில் ஆர்டர் பேட்டிங்கில் போராடி வருவதால் ஜாதவின் அனுபவம் மற்றும் இன்னிங்ஸை முடிக்கும் திறன் ஆர்.சி.பி அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

இதனால் அடுத்து வரவிருக்கும் போட்டிகளில் கேதர் ஜாதவ் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோவுக்கு எதிரான அவர்களின் போட்டிக்கு முன்னதாக ஜாதவ் லக்னோவில் ஆர்.சி.பி அணியில் இணைவார். எனினும் இன்று நடைபெறும் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kedar Jadhav has replaced David Willey in RCB for IPL2023.


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->