பஞ்சாப் அணியை பந்தாடிய ஆன்ட்ரே ரசல்.. அசத்தலாக வெற்றிபெற்ற கொல்கத்தா அணி.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் சீசன் 15-வது கிரிக்கெட் தொடரில் தொடரின் 8-வது லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 137 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பனுகா ராஜபக்சே  31 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் அணியை திணறவிட்டார்.

இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களான ரகானே, வெங்கடேஷ் அய்யர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர்  அதிரடியாக ஆடி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அதன் பிறகு சாம் பில்லிங்ஸ், ஆன்ட்ரே ரசல் இருவரும் ஜோடி சேர்ந்து அற்புதமாக விளையாடினர். ஆன்ட்ரே ரசல் பஞ்சாப் பந்துவீச்சாளர்களை பந்தாடினர். மிக விரைவாக 26 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 

14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆன்ட்ரே ரசல் ஆட்டமிழக்காமல் 71 ரன்னும், பில்லிங்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்து அசத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KKR vs PBKS Match KKR Win by 6 Wickets


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->