தென்ஆப்பிரிக்க தொடரிலிருந்து கேப்டன் கே.எல். ராகுல் விலகல்.. புதிய கேப்டன் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கேப்டன் கே.எல்.ராகுல் விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியை கேஎல் ராகுல் வழி நடத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் விலகியுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KL Rahul ruled out South Africa T20 series


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->