"லயனோல் மெஸ்ஸி, இன்டர் மியாமி அணியில்!
Layonal Messi Gonna Be Play For The Team Miami
கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளயாடிவந்த பிஎஸ்ஜி (பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன்) அணிக்கான இரண்டாண்டு ஒப்பந்தம் கடந்த வாரம் முடிந்த நிலையில், அடுத்து எந்த அணியில் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார் என உலக கால்பந்தாட்ட ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
குறிப்பாக தனது பழைய அணிக்கே(பார்சிலோனா) திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்காவின் இன்டர் மியாமி மற்றும் சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணிகளும் மெஸ்ஸியுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சித்து வந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் இன்டர் மியாமி க்ளப் அணியை லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்துள்ளார்.
இது குறித்து மெஸ்ஸி கூறும்போது, எனது எண்ணம் பணம் இல்லை, அது வேறானதாக உள்ளது. ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் 2026 ஆனது கனடா, அமெரிக்கா, மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா நாட்டின் அணிக்காக விளையாடுவது கால்பந்தாட்டத்திற்கு புதிய உணர்வை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
English Summary
Layonal Messi Gonna Be Play For The Team Miami