லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் : குஜராத்தை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அபார வெற்றி! - Seithipunal
Seithipunal


லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்ற
முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த தொடரில் இந்தியா கேப்பிடல்ஸ், மணிபால் டைகர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த தொடரின் 3வது சீசன் இந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஷிகர் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 145 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணி, றுதியில் குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 26 ரன் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி பெற்றது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Legends league cricket southern super stars win over gujarat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->