லெஜண்ட்ஸ் லீக் டி20 : சூர்யாஸ் ஒடிசா - மணிபால் டைகர்ஸ் அணிகள் இன்று மோதல்! - Seithipunal
Seithipunal


லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்ற
முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் இந்தியா கேப்பிடல்ஸ், மணிபால் டைகர்ஸ் அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த தொடரின் 3வது சீசன் இன்று தொடங்குகிறது.

ஜோத்பூர்,  ஜம்மு, ஸ்ரீநகர், சூரத் என 4 நகரங்களில் இந்த தொடர் நடைபெறும் நிலையில், இதில் மணிபால் டைகர்ஸ், டோயம் ஐதராபாத், கோனார்க் சூர்யாஸ் ஒடிசா, குஜராத் கிரேட்ஸ் உள்ளிட்ட  6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இன்று தொடங்கும் இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தொடரின் இறுதிப்போட்டி அக்டோபர் 16ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று ஜோத்பூரில் தொடங்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் சூர்யாஸ் ஒடிசா - ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணி  எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legends League T20 Suryas Odisha vs Manipal Tigers clash today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->