முதல் முறையாக அரையிறுதி போட்டிக்குள் நுழையும் இந்தியா! மனிகா பத்ராவின் வெறித்தனமான ஆட்டம்! - Seithipunal
Seithipunal


தாய்லாந்த் நாட்டின், பாங்காங் நகரில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சீன வீராங்கனை தைபேயின் சென் சூ யு-வை, இந்திய வீராங்கனை மனிகா பத்ரா எதிர்த்து ஆடினார்.

பல திருப்பங்களையும், கடைசி நேர பதற்றத்தையும் ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை சென் சூ-யுவை 4-3 (8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9) என்ற கணக்கில் மனிகா பத்ரா வீழ்த்தினார். முந்தைய ஆட்டத்தில் உலகின் ஏழாம் நிலை வீராங்கனை சீனாவின் ஸிங்கோங் யாவ்-வை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில், வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை மனிகா பத்ரா தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார். 

அடுத்து நடக்கவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், கொரிய நாட்டின் வீராங்கனை ஜியோன் ஜியி மற்றும் ஜப்பான் நாட்டின் வீராங்கனை மீமா இடோ ஆகியோரை, நம் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா எதிர்கொள்ளவுள்ளார். 

இதற்கிடையே, ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டு சென்ற மனிகா பத்ராவிற்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலர் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manika batra asian cup table tennis


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->