2011 உலகக் கோப்பை : மும்பை வான்கடே மைதானத்தில் 'எம்எஸ் தோனி' அடித்த 'வெற்றி சிக்ஸர்' நினைவு சின்னம்! - Seithipunal
Seithipunal



2011 உலகக் கோப்பை போட்டியின் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில், மும்பை வான்கடே மைதானத்தில் 'எம்எஸ் தோனி' அடித்த 'வெற்றி சிக்ஸர்'க்கு நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.

தோனி அடித்த சிக்ஸரின் பந்து விழுந்த அந்த இடத்தில சிறிய அளவில் ஒரு வெற்றி நினைவு சின்னம் அமைக்க உள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் அந்த பேட்டியில், இன்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அபெக்ஸ் கவுன்சில், 2011 உலகக் கோப்பை வெற்றியின் நினைவாக வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு சிறிய வெற்றி நினைவகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. 

எம்எஸ் தோனியின் வரலாற்று வெற்றி சிக்ஸர் ஸ்டாண்டில் இறங்கிய இடத்தில் இந்த நினைவகம் கட்டப்படும்.

எம்.சி.ஏ நாளை எம்.எஸ் தோனியை அணுகி, நினைவிட திறப்பு விழாவிற்கு நேரம் கேட்கும். வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி மும்பை இந்தியன் அணியுடனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டம் நடை பெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் விளையாட வரும் எம்எஸ் தோனி இந்த நினைவு சின்னத்தை திறந்து வைப்பார் என்று நம்புகிறோம். 

தோனியின் ஒப்புதல் மற்றும் நேரம் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தே மேற்குறிப்பிட்ட நடைமுறை. தற்போதுவரை தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

ஆனால், வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பை வெற்றி நினைவு சின்னத்தை எம்.சி.ஏ திறந்து வைக்கும் போது, எம்.சி.ஏ அவருக்கு பாராட்டு தெரிவிக்கும்" என்று, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்சிஏ) தலைவர் அமோல் காலே ஏஎன்ஐயிடம் தெரிவித்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MCA small victory memorial MS Dhoni hit the winning six in Wankhede Stadium


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->