சாரி பிரதர்! இதுக்கு பெயர்தான் கர்மா! சோயிப் அக்தரை கலாய்த்த முகமது ஷமி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மோதிய இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் மாற்றம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் தனது சொதப்பலான ஆட்டங்களால் அரையிறுதிக்கு தகுதி பெறாது என பலரால் விமர்சனம் செய்யப்பட்டது. இந்திய ரசிகர்களும் விமர்சனம் செய்திருந்தனர் அதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் "தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஆட்டம் உண்மையிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. இந்த உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் இந்த வாரம் வெளியே வந்துவிடும் என்று ஏற்கனவே நான் கூறியுள்ளேன். அதே சமயம் அடுத்த வாரம் அரை இறுதியில் விளையாடிய பின் இந்தியாவும் தோல்வி அடைந்து நாடு திரும்பும். ஏனெனில் இந்தியா ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி கிடையாது" என விமர்சனம் செய்திருந்தார். 

அதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதற்கு இந்திய அணியின் மோசமான பந்துவீச்சே காரணம் என சோயிப் அக்தர் தனது சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு இந்திய அணியின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான பந்துவீச்சின் காரணமாக ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக கிரிக்கெட் விமர்சனங்கள் கருத்து முன்வைத்து வருகின்றனர். இந்திய அணியை விமர்சனம் செய்த சோயிப் அக்தர் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் தோத்ததற்கு உடைந்த இதயம் போன்ற இமோஜியை ட்விட் செய்து இருந்தார். அந்த ட்விட்டிற்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி "சாரி பிரதர்! இதுக்கு பேரு தான் கர்மா" என ரீட்விட் செய்தார். முகமது ஷமி செய்த ரீட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவரின் இத்தகைய செயலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஆதரவாளர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் முகமது ஷமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohammed Shami teased Shoaib Akhtar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->