#IPL2023 : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த தல தோனி.. என்ன தெரியுமா.?
MS Dhoni 200 wickets in IPL
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் மற்றும் கடைசி பந்தில் ஒரு ரன் அவுட்டை தோனி செய்திருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
அந்த வகையில் விக்கெட் கீப்பராக ஐபிஎல் போட்டிகளில் 200 விக்கெட் (கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட்) வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
English Summary
MS Dhoni 200 wickets in IPL