T20 போட்டியில் 6000 ரன்களை கடந்து கேப்டன் எம்.எஸ் தோனி சாதனை.. முதலிடத்தில் யார் தெரியுமா.?
Ms Dhoni crossed 6000 runs as captain
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் 56-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்களை குவித்தது.
அதைத்தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுகளை இழந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில், அணியின் கேப்டனாக 6000 ரன்களுக்கு மேல் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய மற்றும் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
English Summary
Ms Dhoni crossed 6000 runs as captain