முகமது நபி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகல்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை டி20 போட்டியின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான அணி அரையிறுதிக்கு செல்லாததால் தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் கேப்டன் முகமது நபி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "கடந்த ஒரு வருடமாக சரியான அணியை தேர்வு செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வு குழு தொலைநோக்கு பார்வையுடன் மிகப்பெரிய தொடருக்கான அணியை உருவாக்குவதில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கான தார்மீக பொறுப்பேற்று ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு கேட்டுக் கொண்டால் தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவேன். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கான் அணிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

 முகமது நபி முதல் முறையாக கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை வழிநடத்தினார். அவரது தலைமையில் 16 டி20 மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர். இவர் 28 ஒருநாள் போட்டிகளில் 601 ரன்களும், 35 டி20 போட்டிகளில் 422 ரன்களும் எடுத்துள்ளார். மேலும் பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muhammad Nabi resigned as Captain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->