அதற்குள் ஓய்வா?! உலகக்கோப்பை முடிந்ததும் ஓய்வு பெறுவதாக அறிவித்த 24 வயது வீரர்! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் நவீன் உல் ஹக் தெரிவித்திருக்கிறார். அவருக்கு 24 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து பேச்சாளராக இருக்கும் நவீன் உல் ஹக் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக ஆடி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் போட்டி தொடரின் போது இந்திய விராட் கோலி உடன் மோதலில் ஈடுபட்டு ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு, சமூக வலை ஊடகங்களில் பிரபலமாக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது, 

லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் சமீபத்தில் நவீன் உல் ஹக் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது சமூக ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியது.

இந்த நிலையில் இந்தியாவிற்கு உலகக்கோப்பை ஆட வந்துள்ள நவீன் உலககோப்பைத்தொடர் முடிந்ததும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்திருக்கிறார். அவருக்கு 24 வயது ஆவதால் இந்த முடிவானது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இருக்கிறது. 

சமீபகாலமாக வீரர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஒரு நாள் போட்டிகளை குறைத்துக் கொண்டு உலக 20 - 20 லீக்குகளில் ஆடுவதில் மட்டுமே ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது நவீன் உல் ஹக்க்கும் இணைந்திருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Naveen Ul Haq announced retirement from ODIs after the World Cup 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->