பத்மஸ்ரீ விருது பெற்றார்.. ஒலிம்பிக் தங்க நாயகன்.!
Neerav Chopra get Padma Shri award
கலை, அறிவியல், சமூகப்பணி, பொது விவகாரங்கள், பொறியியல், மருத்துவம், வர்த்தகம், இலக்கியம், கல்வி, குடிமைப்பணி, விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்திய நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது.
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம பூஷன் மற்றும் 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைநகர் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் 54 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் என்ற நீரைச் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
English Summary
Neerav Chopra get Padma Shri award