இந்திய தடகள வீரர்..தங்கம் வென்ற இளைய இந்திய வீரர்..யார் இவர்?
Neerav Chopra history
இந்திய தடகள வீரரான நீரவ் சோப்ரா ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இந்தியத் தரைப்படையின் இளநிலை அதிகாரி. தங்கம் வென்ற இளைய இந்திய வீரர். அர்ஜூனா விருதை பெற்றவர். ஈட்டி எறிதலில் சாதனை படைத்தவர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் தனி நபர் விளையாட்டில் தங்கம் வென்றவர்.
பிறப்பு :
நீரஜ் சோப்ரா 1997ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியில் ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். இவர் சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டம் பயின்றார். பின்னர் இந்திய ராணுவத்தில் இணைந்தார்.
இவர் இந்திய ஈட்டி எறிதல் வீரரும், இந்தியத் தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவார்.
மேலும், இளையோருக்கான உலக தடகளப் போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்ற முதலாவது இந்தியரும் ஆவார்.
நீரஜ் சோப்ரா 2011ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்த தொடங்கினார்.
குடும்பம் :
இவருடைய தந்தை பெயர் சதீஷ், தாய் பெயர் சரோஜ் தேவி ஆவார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
ராணுவப்பணி :
இவர் பள்ளி காலத்திலேயே விளையாட்டில் சிறந்து விளங்கியதால் இவருக்கு தகுந்த நேரத்தில் இந்திய அரசு இவரை இந்திய ராணுவத்தில் சேர்த்து தொடர்ந்து விளையாட ஊக்கமளித்தது. தற்போதும் இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
சாதனைகள் :
2016ஆம் ஆண்டு போலந்து நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
2018ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.
டோக்கியோவில் நடைபெற்ற 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
விருதுகள் :
2018ஆம் ஆண்டு கோல்ட் கோஸ் காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
இவர் ராணுவத்திலும் சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு விஷிஷ்ட் சேவா பதக்கம் (ஏளுஆ) 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.