புதிய உலக சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.!! - Seithipunal
Seithipunal


12வது பெண்கள் உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 

ஹாமில்டனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முந்தைய போட்டியில் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணியை வென்று வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. 

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். 

அதிகமுறை கேப்டன் பொறுப்பை பெற்றவர் சாதனை பெற்றவர் என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தங்கியதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை கேப்டன் பொறுப்பை பெற்றவர் என்ற சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new world record for mithali raj


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->