மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் நியமனம்.! - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக செயல்பட்டு வந்த கெய்ரோன் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன பொல்லார்ட் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தார்.

இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடுத்து, விக்கட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக பூரன் செயல்படுவார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nicholas Pooran appointed as captain for West Indies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->