நார்வே செஸ் குரூப் ஓபன் தொடர் : சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.!
Norway chess group serious pragnantha champion
நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
நார்வே நாட்டில் நடந்த குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் இந்தியாவில் இளம் கிராண்ட் மாஸ்டரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மொத்தம் நடைபெற்ற 9 சுற்றில், 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. இவர் விளையாடிய கடைசி 9-வது சுற்றில் இந்தியாவின் ப்ரணித்தை எதிர்கொண்டார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா 49வது நகர்வின் போது வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஏற்கனவே இவர் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் போன்ற ஜாம்பவான் வீரர்களை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Norway chess group serious pragnantha champion