நாயகன் மீண்டும் வரார்! அதிரடியாக அறிவித்த நியூசிலாந்து அணி! - Seithipunal
Seithipunal


வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நியூஸிலாந்து அணியில், டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், டேவன் கான்வே, லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஆடம்மில்னே, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி, வில் யங்.- ஏஎப்பி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், ஒரு வருடத்துக்கு பின் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான டிரெண்ட் போல்ட் இடம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணியின் சம்பள ஒப்பந்தத்தை ஏற்க மறுத்திருந்த போல்ட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாதாரண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

மேலும், இந்தியாவில் நடைபெற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் அவர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

99 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ட்ரண்ட் போல்ட், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NZ vs ENG Trent bould back in team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->