5 சிக்சர், 4 பவுண்டரி., அடைமழையை அவிட்டாக்கிய ஹர்ஷல் படேல்.!
pooran wicket
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டியை இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 20 ஓவர் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (டேபியு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மையர்ஸ் 4 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதேசமயத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன், 43 பந்துகளில், 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 60 ரன்கள் சேர்த்தார். அடைமொழி என ரன்குவிப்பில் ஈடுபட்டிருந்த அவரை, ஹர்ஷல் பட்டேல் அணைபோட்டு அவுட் ஆக்கினார்.
அதேபோல் இந்திய அணியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ரவி பிஷ்னோய் அசத்தலாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து, 145 ரன்களை சேர்த்துள்ளது.