புரோ ஹாக்கி லீக் இந்தியா அபாரம்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

புரோ ஹாக்கி லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 9 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தென் ஆப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

ஆட்டத்தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்தியா, 4-வது நிமிடத்தில் முதல் கோலும், 6 வது நிமிடத்தில் இரண்டாவது கோலும், 23-வது நிமிடத்தில் மூன்றாவது கோலும் என ஹாட்ரிக் கோலை அடித்தார் ஜக்ராஜ் சிங். இந்த மூன்று கோலும் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் அடிக்கப்பட்டது. குர்சாஹிப்ஜித் சிங் மற்றும் தில்பிரீத் சிங் ஆகியோரும் தலா இரண்டு கோல் அடித்தனர். 

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 10-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே தனது முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை இந்திய அணி தனது ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் மூன்றாவது ஆட்டத்தில் மறுபடியும் பிரான்ஸ் அணியுடனேயே மோதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro Hockey India beat South Africa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->