புரோ கபடி லீக் :  2வது முறையாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன்.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் 9வது சீசன் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

லீக் போட்டிகளின் முடிவில் முதல் இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளிகள்), புனேரி பால்டன் (80 புள்ளிகள்) ஆகிய 2 அணிகளும் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

இதனையடுத்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பான்தர்ஸ் - பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 49-29 என்ற புள்ளி கணக்கில்  வெற்றி பெற்று ஜெய்ப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி - புனே உடன் மோதியது. இந்த போட்டியில் 39-37 என்ற புள்ளிகள் கணக்கில் புனே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பல்தன் அணியும் மோதின.

இதில், முதல் பாதி முடிந்த நிலையில், 14 - 11 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற 2வது பாதியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய ஜெய்ப்பூர் அணி ஆட்ட நேர முடிவில் 33 - 29 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்று, 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி தொடரின் முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பிறகு சுமார் 8 ஆண்டுகள் கழித்து 2வது முறையாக ஜெய்ப்பூர் பிங்க் பான்தர்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro kabaddi league season 9 Jaipur pink panthers champion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->