அட நம்புங்க.. நம்ம ஊரு புஜாரா தான்... புஜாரா செய்த செயலால் திகைத்து நின்ற மைதானம்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் சத்தீஷ்வர் புஜாரா. இவர் திறமையான ஆட்டக்காரராக இருந்தாலுமே இவருடைய ஆட்டமானது டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக அமைந்துள்ளது என கருதிய இந்திய அணி நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அவர் ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதில்லை. 

நீண்ட நாட்களாகவே அவர் தொடர்ந்து போராடி வந்தாலும் அவருக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை. ஐபிஎல் போட்டி தொடர்களிலும் அவரை எந்த அணியும் சீண்டுவதில்லை. இந்திய அணி சமீபகாலமாக அதிக அளவில் டெஸ்ட் போட்டி விளையாடாமல், இருபது ஒவர் மற்றும் ஒரு நாள் போட்டிகள் விளையாடி வருவதால் அவருக்கு இந்தியாவில் போட்டிகள் ஏதும் இல்லை. ஆதலால் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் விளையாட முடிவு செய்த புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி அணியில் ஒன்றான சசெக்ஸ் அணியில்  இணைந்தார். அந்தணியின் கேப்டனாக இருந்தவர் காயம் அடைந்து வெளியேறவே அந்தணியின் கேப்டனாகவும் செயல்பட ஆரம்பித்தார். 

நான்கு நாட்கள் கொண்ட கவுண்டிப் போட்டி தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய புஜாரா, அந்த போட்டி தொடரின் இரண்டாவது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார்.அந்த தொடரில் மூன்று இரட்டை சதங்களையும் அவர் விளாசி இருந்தார்.

இந்த நிலையில் 50 ஓவர் போட்டியான ராயல் லண்டன் கப் கோப்பைக்கான போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கும் புஜாரா தான் கேப்டனாக விளையாடி வருகிறார். புஜாரா கடந்த போட்டியில் 79 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அந்த அணியினரை புருவம் உயர்த்த வைத்தார். இருப்பினும் அவர் அணியானது இறுதியில் வெற்றி வாய்ப்பு இழந்தது. 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் அவர் 131 பந்துகளில் 174 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் அதில் 20 பவுண்டர்களையும் 5 சிக்ஸர்களையும் விளாசியது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது. தொடர்ச்சியாக அவர் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம் விளாசியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

அட நம்ம புஜாராவா இது? டெஸ்ட் போட்டியில் டொக்கு டொக்குன்னு அடிக்கிறவராச்சே. இவரா பௌண்டரீ, சிக்ஸரா விளாசுகிறார் என சமூக ஊடகங்கள் பக்கம் முழுவதுமாக புஜாராவின் புராணமாகவே இருக்கிறது. குறிப்பாக இன்று முதலில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 103 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இறுதியில் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கடைசி 28 பந்துகளில் அவர் 74 ரன்களை அடித்து ஆச்சர்யப்படுத்தினார். இறுதி நேரத்தில் மட்டும் அவருடைய ஸ்டிரைக் ரேட் ஆனது 200க்கும் மேல் என்ற நிலையில் இருந்தது. 

அவருடைய அதிரடி ஆட்டத்தை பார்த்து அனைவருமே ஒரு நிமிடம் மெய்மறந்து தான் போனார்கள். அவர் 200 எண்களை இன்று எட்டி விடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் வெளியேறினார். ராயல் லண்டன் கோப்பை போட்டியில் சசெக்ஸ் அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக பதிவாகி இருக்கிறது. மேலும் இதுவரையில் நடைபெற்ற இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் புஜாரா தான் இருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pujara hit back to back century for Sussex at royal London cup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->