இதுதான் என்னுடைய கடைசி உலகக் கோப்பை.. கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை தான் விளையாடும் கடைசி உலக கோப்பையாக இருக்கும் என அறிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்தில் சிறந்த அணியாக விளங்கி வரும் அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் லியோனல் மெஸ்ஸி. இவர் உலகின் தலைசிறந்த வீரர். இவருக்கு எப்போதும் தனி இடம் உண்டு.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையில் களமிறங்கினார். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் தனது கடைசி கால்பந்து உலகக் கோப்பை என மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லியோனல் மெஸ்ஸி, கண்டிப்பாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். இந்த உலகக் கோப்பையை ஆவலாக நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன். என்ன நடக்க போகிறது இந்த உலகக் கோப்பை தொடர் எப்படி போகப் போகிறது என்ற ஆர்வமும் பதற்றமும் உள்ளது. மேலும் இந்த உலகக் கோப்பையை வெற்றி பெற்று எனது நாட்டுக்கும், ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். தற்போதைய இவருடைய இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Qatar 2022 world cup my Last world Cup - Leonel Messi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->