ரஞ்சி கோப்பையில் ரஹானே - புஜாரா மோதல்.!
Rahane and Pujara in Ranji Trophy
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் விளையாட உள்ளனர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதில் 38 அணிகள் பங்கேற்க உள்ளன. முதலில் லீக் சுற்று ஆட்டங்களும் பின்னர் நாக் அவுட் சுற்று ஆட்டங்களும் நடைபெற உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆட்டங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன. லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 17 ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை சென்னை, அகமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, ராஜ்கோட், கட்டாக், கொல்கத்தா உள்ளிட்ட 9 நகரங்களில் நடைபெற உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் லீக் சுற்றில் பங்கேற்கும் அணிகள் நாளை போட்டி நடைபெறும் இடங்களுக்கு நாளை சென்ன்றடைய வேண்டும் எனவும் ஒவ்வொரு அணியிலும் 20 வீரரகள் உட்பட 30 பேர் வரை இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் 5 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அப்போது அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி கோப்பை தொடருக்கான சவுராஷ்டிரா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஜெயதேவ் உனட்கட் தலைமையில் புஜாரா இடம்பிடித்துள்ளார். பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணியில் ரஹானே இடம்பெற்றுள்ளார்.
அண்மைக் காலமாக டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறி வரும் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ரஞ்சி போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahane and Pujara in Ranji Trophy