மீண்டும் தந்தையான கிரிக்கெட் வீரர் ரஹானே.. என்ன குழந்தை பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருப்பவர் ரகானே. இவர் சிறு வயது முதல் காதலித்து வந்த தனது தோழி ராதிகாவை கடந்த 2014 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2019 இல் முதன் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் அஜிங்கியா ரஹானே மனைவி ராதிகா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு அக்டோபர் மாதத்தில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர். 

இந்த நிலையில், அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று அஜிங்கியா ரகானே மற்றும் ராதிகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த செய்தியை ரகானே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahane Get Second Boy Baby


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->