ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்! தமிழகம் டெல்லி அணியுடன் மோதல்.! - Seithipunal
Seithipunal


இன்று தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் டில்லி அணியை சந்திக்கிறது.

38 அணிகள் பங்கேற்கும் 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. லீக் சுற்று மற்றும் நாக் அவுட் சுற்று என இரண்டு சுற்றுகளாக இந்த தொடர் நடைபெறுகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கி மார்ச் 6-ஆம் தேதி வரை சென்னை, அகமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, ராஜ்கோட், கட்டாக், கொல்கத்தா உள்ளிட்ட 9 நகரங்களில் நடைபெற உள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

முதல் நாளில் கவுஹாத்தியில் நடைபெறும் போட்டியில் தமிழகம் டில்லி அணியை எதிர்கொள்கிறது. இது தவிர மற்ற அணிகள் பங்கேற்கும் 18 ஆட்டங்களும் இன்று நடைபெறுகின்றன.

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. தமிழகம்  ஏற்கனவே 1954-54 ஆம் ஆண்டிலும், 1987-88 ஆம் ஆண்டிலும் கோப்பை கைப்பற்றி உள்ளது. இந்த முறை தமிழக அணி சிறப்பாக செயல்பட்டு மூன்றாவது முறையாக கோப்பயை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக வரலாற்றிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranji Trophy begins today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->