ஐபிஎல் தொடக்க விழாவில் 'விஜய்' ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! டபுள் தமாக்கா!
Rashmika Mandanna and Tamanna Bhatia are likely to perform in the opening ceremony of IPL.
உலக நாடுகளையே திரும்பி பார்க்கவைத்த இந்தியாவின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் நடந்து முடிவடைந்துள்ளது.
வரும் மார்ச் 31ம் தேதி 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் நிலையில், இந்த ஐபிஎல் சீசனனின் தொடக்க விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும், தமன்னா பாட்டியாவும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், ஐபிஎல் தொடக்க விழாவில் ரஞ்சிதாமே பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடனம் ஆட வாய்ப்பு உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு நிச்சம் இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு, ரசிகர்களின் பார்வைக்காக ஐபிஎல் டி20 கோப்பை காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற இந்த தொடரில், மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது.
ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பட்டியல் :
ஐபிஎல் 2023 அணிகளின் கேப்டன்கள்
குஜராத் டைட்டன்ஸ் - ஹார்திக் பாண்டியா
சென்னை சூப்பர் கிங்ஸ் - எம்.எஸ் தோனி
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்மார்க்ரம்
டெல்லி கேப்பிடல்ஸ் - டேவிட் வார்னர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டு பிளெஸ்சிஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயஸ் ஐயர்
ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கே.எல். ராகுல்
பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவன்
English Summary
Rashmika Mandanna and Tamanna Bhatia are likely to perform in the opening ceremony of IPL.