சென்னை அணியில் ஜடேஜாவை தக்க வைத்ததற்கு என்ன காரணம் - ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம்.!
Ravichandran Ashwin speech about CSK retain ravindra jadeja
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதி அனைத்து அணிகளும் வெளியிட்டது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர ஆல்ட்ரவுண்ட்ரான ஜடேஜா தக்கவைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக சென்னை அணியின் நிர்வாகத்திற்கும் ஜடேஜா விற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் ஜடேஜா சென்னை அணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை எடுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜடேஜாவை தக்க வைத்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலமாக யூடியூபில் கிரிக்கெட் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜடேஜா குறித்து அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணியில் விளையாட மாட்டார் என்றெல்லாம் பல வதந்திகள் வந்தது. ஆனால் இந்த முறையும் சென்னை அணிக்காக தான் அவர் விளையாடுகிறார். ஜடேஜா போன்ற ஒரு வீரரை சென்னை அணிக்கு 16 கோடி என்பது சாதாரணம்தான்.
மேலும், அவரது இடத்திற்கு வேறு ஒரு இந்திய வீரரை நிரப்புவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஏனென்றால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். ஒருவேளை ஜடேஜா வேறொரு அணிக்கு சென்றால் எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என கூறியுள்ளார்.
English Summary
Ravichandran Ashwin speech about CSK retain ravindra jadeja