புதிய பந்தோ பழைய பந்தோ பந்து வீச தயாராக இருக்கேன்! - வெளிப்படையாக பேசிய முகமது ஷமி! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்து வீச தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

நேற்று முதல் ஆசிய கோப்பை தொடர் தொடங்கிய நிலையில் நாளை மறுநாள் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. 

ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக அணியின் இல்லாமல் இருந்து மீண்டும் திரும்பி உள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

இவர் அணியில் இல்லாத போது ஷமி மற்றும் சிராஜ் தொடக்க ஓவர்களை இந்திய அணிக்காக வீசினர். தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பும்ரா அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளதால் யார் பந்து வீசப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து பழைய பந்து எதிலும் பந்து வீச தயாராக இருப்பேன் என தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, 'புதிய பந்து அல்லது பழைய பந்து என பந்து வீசுவதில் எனக்கு தயக்கம் கிடையாது. இந்த விஷயத்தில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

நாங்கள் மூவரும் சிறப்பாக வந்து வீசுகிறோம். அணியின் தேவைக்கேற்ப பந்து வீச தயாராக உள்ளேன். வெள்ளை பந்து, சிவப்பு பந்து குறித்து அதிகம் பேசப்படுகிறது. 

சரியான இடத்தில் நீங்கள் பந்து வீசினால் எந்த நிற பந்து என்பதெல்லாம் ஒரு பொருட்டாக அமையாது. உங்களுடைய உழைப்பை கொடுத்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். காயத்திலிருந்து மீண்டு பும்ரா அணியில் இணைந்துள்ளார். மேலும் அவர் சிறப்பாக பந்து வீசுகிறார்' என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ready to throw ball Mohammed Shami spoke 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->