டிராவிட் மற்றும் தோனியை பின்னுக்கு தள்ளி ரிஷப் பண்ட் புதிய சாதனை.!!
rishabh pant rew record for sa
இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்தது. இந்திய அணி சார்பில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 85 ரன் எடுத்தார். கேப்டன் கேஎல் ராகுல் 55 ரன் எடுத்தார். தாகூர் 40 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை நின்றார். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஷம்சி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 48.1 ஓவரில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் v அணி வென்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் 85 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் 78 ரன்களை எட்டியபோது தென்னாபிரிக்கா மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் டிராவிட், தோனி போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பட்டியல் பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடம் பிடித்துள்ளார். ரிஷப் பண்ட் 85 ரன்கள், ராகுல் டிராவிட் 77 ரன்கள், தோனி 65 ரன்கள் எடுத்துள்ளனர்.
English Summary
rishabh pant rew record for sa