ஓரே சதத்தில் 3 சாதனைகளை படைத்த "ஹிட் மேன்" ரோகித் ஷர்மா!!
Rohit Sharma made 3 records in one century against Afghanistan
இன்று டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி 39 ரகளை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துகளை சிதறவிட்ட கேப்டன் ரோகித் ஷர்மா தற்போது வரை 81 பந்துகளில் 130 ரன்களை குவித்துள்ளார். அதில் 16 பௌண்டரிகள், 5 சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் ரோகித் ஷர்மா தனது 7வது உலகக்கோப்பை சதத்தினை நிறைவு செய்துள்ளார். மேலும் 63 பந்துகளில் சதத்தினை பூர்த்தி செய்ததால் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் விலாசிய இந்திய வீரர் பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார்.
அதேபோன்று மேற்கிந்திய தீவுகள் அணையின் வீரர் கிறிஸ் கெய்லின் அதிக சிக்சர்கள் சாதனையையும் முறியடித்துள்ளார். அதே போன்று உலக கோப்பை போட்டிகளில் அதிவேகத்தில் ஆயிரம் ரகளை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோகித் ஷர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rohit Sharma made 3 records in one century against Afghanistan