டி20 உலக கோப்பை : யுவ்ராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.!
Rohit Sharma most international Sixers in Indian T20 World Cup
ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று டி20 உலகக்கோப்பையில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி இன்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 39 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 53 ரன்களைக் குவித்தார்.
இதன் மூலம் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்து ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை (33 சிக்ஸர்) பின்னுக்கு தள்ளி 34 சிக்சர்களுடன் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல் 63 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 34 சிக்சர்கள் அடித்து ரோகித் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
English Summary
Rohit Sharma most international Sixers in Indian T20 World Cup