#INDvsSA || முதல் இன்னிங்சில்... சிராஜ் வேகத்தில் தவிடு பொடியான தென்னாப்பிரிக்கா.!!
sa all out 55 runs in 1st innings 2nd test against ind
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று கேப்டன் நகரில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 2வது டெஸ்டில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்தூல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முகேஷ் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்ரைன் 30 பந்துகளை எதிர் கொண்டு 15 ரன்களையும், டேவிட் பெடிண்ங்கம் 17 பந்துகளை எதிர் கொண்டு 12 ரன்களை மட்டுமே எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் சிறப்பாக வந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரை தொடர்ந்து முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆனது.
English Summary
sa all out 55 runs in 1st innings 2nd test against ind