ஐ.பி.எல் 2022ல் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷித் கான், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. குஜராத் அணி 18.1 முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அறிமுகமான முதல் தொடரிலே குஜராத்  அணி சாம்பியன் பட்டம் வென்றது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்ததன் மூலம் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஐபிஎல் கோப்பையை வென்ற 4-வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஹார்திக் பாண்டியா. 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் TEAM OF IPL 2022-ஐ வெளியிட்டுள்ளார். ஐ.பி.எல் 2022ல் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கேப்டனாக ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷிகர் தவான், ஜோஸ் பட்லர், கே.எல்.ராகுல், டேவிட் மில்லர், லியம் லிவிங்ஸ்ட ன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரஷித் கான், முகமது ஷமி, பும்ரா, சாஹல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tendulkar ipl 2022 playing xi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->