சச்சினுக்கு பிடித்த மைதானம் எது தெரியுமா? தமிழில் ட்வீட் செய்த டெண்டுல்கர்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களை விளாசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் என சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சொல்லிக் கொண்டே போகலாம்.

சச்சின் டெண்டுல்கர் 2012ஆம் ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு இவரது பிளேயிங் இட் மை வே என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. இவர் 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இவர் பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, பாரத ரத்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கௌரவ கேப்டன் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இன்று டுவிட்டரில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த நிலையில் சச்சினிடம் ரசிகர் ஒருவர் மும்பை வான்கடே மைதானத்துக்கு அடுத்து உங்களுக்கு இந்தியாவில் எந்த மைதானம் பிடிக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு சென்னை சேப்பாக்கம் என தமிழில் பதிலளித்தார்.

மேலும், தனக்கு பிடித்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி எனவும், பிடித்த உணவு பிரியாணி எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Tendulkar tweet favourite stadium


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->