T20 உலகக் கோப்பை : ஆசிய சாம்பியன் இலங்கையை வீழ்த்திய நமீபியா.. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலக கோப்பை இன்று முதல் (அக்டோபர் 16 ) முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

 இதில், மொத்தம் 16 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

மீதமுள்ள 4 இடங்களுக்கான அணிகள் முதல் சுற்று ஆட்டங்களில் இருந்து தேர்வாகும். இதில் ‘ஏ’ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும்,  ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் களை இழந்து 163 ரன்கள் குவித்தது. 

அதனைத் தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, நமீபியா அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 19ஓவர்களில் அனைத்து விக்கட்களையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 இதன் மூலம் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை நமீபியா அணி வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் நமிபியா அணியை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்று நமீபியா அணி, தங்கள் அணியின் பெயரை கிரிக்கெட் உலகம் நினைவில் கொள்ளுமாறு செய்துள்ளது"  என பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sachin Tendulkar wishes to Namibia team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->