பர்த் டே பேபி சேவாக் உனக்கெல்லாம்.... சச்சின் கொடுத்த ஷாக்!
sachin tendulkar wish virender sehwag
தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின், சேவாக் களமிறங்கிய காலம் இந்திய அணியின் பொற்காலம் எனலாம். அந்த மேஜிக் பார்ட்னர்ஷிப் பற்றி நினைத்தாலே.... அனல் பறக்கும், நெஞ்சம் படபடக்கும்.
தொடக்க ஆட்டக்காரர்களாக இருவரும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். முக்கியமாக பவர் பிளேயில் சேவாக்-கின் ஆட்டத்தை பார்க்கவே காத்திருந்த கண்கள் தான் எத்தனை.
இன்று இரட்டை சதத்தை பலர் சர்வ சதுரமாக அடித்தாலும், அதனை தொடங்கி வைத்தவர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான்.
முதல் இரட்டை சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தொடங்கி வைக்க, சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில், அதிரடி மன்னன் சேவாக் பிறந்தாளுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புதுவிதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த சச்சினின் அந்த வாழ்த்துச் செய்தியில், "நான் ஒருமுறை சேவாக்கிடம் பொறுமையாக விளையாடும்படி கூறினேன். "சரி" என்று சொன்ன சேவாக், அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்தார்.
நான் சொல்வதற்கு நேர்மாறாக செய்ய விரும்பும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனவே, தயவுசெய்து ஒரு போரிங்கான பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் சேவாக்" என்று சச்சின் தனது பாணியில் வாழ்த்தியுள்ளார்.
English Summary
sachin tendulkar wish virender sehwag